வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநர் அலவலகம் அறிவித்துள்ளது.;

Update:2026-01-10 12:16 IST

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநர் அலவலகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்