வரதட்சணை கொடுமை; தாய்-மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு
நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தாய்-மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த பிரபுராஜன் (வயது 28). இவரது மனைவி நித்யா (24). திருமணத்தின்போது நித்யாவின் குடும்பத்தினர் சார்பில் வரதட்சணையாக 7 பவுன் நகையும், ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்களும் கொடுத்தனர்.
இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரபுராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் நித்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவர், மாமியார் மயில் மற்றும் உறவினர்கள் ஷில்பா, அற்புதராஜ் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிலக்கோட்டை கோர்ட்டில் நித்யா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மும்தாஜ், பிரபுராஜன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.