கனமழையால் தரைப்பாலம் உடைப்பு

திண்டுக்கல் அருகே கனமழையினால் தரைப்பாலம் உடைந்தது.

Update: 2022-12-14 17:22 GMT

 திண்டுக்கல் சீலப்பாடி அருகே குள்வாரி என்ற தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சந்தனவர்த்தினி ஆற்றின் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் கன மழை பெய்தது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தரைப்பாலம் உடைந்தது.

இதன்காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உணவு உள்ளிட்ட அடிப்படடை வசதிகள் கிடைக்காமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், மேற்கு தாசில்தார் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கயிற்றின் மூலம் அவர்களை மீட்டு அங்கு உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்