காவிரி ஆற்றில் வெள்ளம் நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து- மின் உற்பத்தி நிறுத்தம்

படகு போக்குவரத்து- மின் உற்பத்தி நிறுத்தம்;

Update:2022-10-16 01:00 IST

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவு தண்ணீர் வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பகல் 11 மணி அளவில் நெரிஞ்சிப்பேட்டை பேரேஜ் வழியாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைக்கும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலையத்தில் நீர் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. கரைபுரண்டு காவிரி ஓடுவதால் அதனை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்