இன்ஸ்டாகிராமில் பழகி வந்த பெண்ணுக்கு ஆபாசபடம் அனுப்பிய வாலிபர் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணுடன் வாலிபர் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.;
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு (வயது 39) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர்.
அப்போது சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணுடன் கணேஷ்பாபு தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் இரவு நேரத்தில் கணேஷ் பாபு, சுமார் 10 ஆபாச படங்களை அந்த பெண்ணின் ‘வாட்ஸ்அப்’ எண்ணுக்கு அனுப்பி உள்ளார்.
இதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கணேஷ்பாபு அனுப்பிய படங்களுடன் தக்கோலம் போலீசில் பெண் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் தாம்பரம் பகுதிக்கு சென்று அங்கு இருந்த கணேஷ் பாபுவை கைது செய்தார்.