தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-30 08:12 GMT

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும், வெப்பம் குறையாமல் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பத்தை சமாளிக்க மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும், இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது.

எனினும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்