தமிழகத்தின் 8 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது.

Update: 2024-04-16 02:40 GMT

சென்னை,

கோடை வெயில் தீவிரமாக வாட்டி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையும் வீசி வருகிறது. இதனால் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி வருகிறார்கள். எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்