எழும்பூரில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

எழும்பூரில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்நாரியப்பனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-24 18:49 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவையொட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்நாரியப்பனூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, சேலம் செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி.எண்-22153) ஜூன் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை மேல்நாரியப்பனூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

அதே போல, பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா ரெயில் நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16031) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29-ந் தேதிகளில் தெலுங்கானா மாநிலம் மத்திராவில் நிற்காது."

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்