முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தில் மாற்றம்

டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Update: 2023-12-19 16:16 GMT

சென்னை,

டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் இருந்து நேரடியாக தூத்துக்குடி சென்று மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று அங்கு இருந்து சாலை மார்கமாக நெல்லை, தூத்துக்குடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்