எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2023-09-29 07:02 GMT

சென்னை,

வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக நேற்று பகல் 11.20 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வயது 98. அவருக்கு சௌமியா, மதுரா, நித்யா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் இறுதி சடங்கு நாளை (சனிக்கிழமை) அரசு மரியாதையுடன் நடக்கிறது.

எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மேலும் மூத்த அமைச்சர் கே.என்.நேரு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்