சமத்துவ நாளையொட்டி அம்பேத்கர் உருவப்படத்துக்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை

சமத்துவ நாளையொட்டி அம்பேத்கர் உருவப்படத்துக்கு கலெக்டர் மலர் தூவி சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.;

Update:2023-04-14 13:47 IST

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஆண்டுதோறும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் நாளை "சமத்துவ நாளாக" அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர். அம்பேத்கரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்