பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-07-30 01:00 IST

நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


கல்லூரி மாணவர்கள்


மேட்டுப்பாளையம் காட்டூர் மகாதேவபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் கீர்த்தி சீனிவாசன் (வயது 19). இவர் பெரியநாயக்கன்பாளையத ்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆர்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ் 3 -ம் ஆண்டு படித்து வந்தார்.


நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் கீர்த்தி சீனிவாசன், தன்னு டன் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் பிரதீஷ் (19), சித்தார்த் (19), ஜெயந்த் (19), அர்ஜுன் ராஜ் (19), சுதர்சன் (19), ஹரிஷ் (19), சஞ்சய் (19), தனி வேந்தன் (19) ஆகியோருடன் மதியம் 3.45 மணிக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆறு ெரயில்வே பாலத்துக்கு அடியில் ஆற்றில் குளிக்க சென்றனர்.


தண்ணீர் மூழ்கினார்


அவர்கள், ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது கீர்த்தி சீனிவாசன், பிரதீஸ் ஆகியோர் திடீரென்று எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சல் போட்டனர்.


உடனே ஆற்றின் கரையோர பகுதியில் இருந்த சிலர் ஆற்றில் இறங்கி பிரதீஸை காப்பாற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கீர்த்தி சீனிவாசன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.


உடல் மீட்பு


இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமை யில் வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடி கீர்த்திசீனிவாசன் உடலை மீட்டனர்.


இதையடுத்து அவருடைய உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப ்பட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீர்த்தி சீனிவாச னின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்