தர்மபுரி அருகே ஆட்டோ மீது லாரி மோதல்; டிரைவர் உள்பட 9 பேர் காயம்

Update:2023-06-06 12:00 IST

தர்மபுரி:

தர்மபுரியை சேர்ந்தவர் பழனி (வயது 65). ஆட்டோ டிரைவர். இவர் பைசு அள்ளியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு லாரி ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர் பழனி, ஜெகநாத் (50) அருள் பூபதி உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்