ரூ.30 கோடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி

அம்மூர் பேரூராட்சியில் ரூ.30 கோடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-10 18:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தொடக்கவிழா நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று பூமிபூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறைகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் புதிய குழாய்களை பதித்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 கோடியே 23 லட்சம் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் குமுதா, அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், பேரூராட்சி செயலாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்