2,033 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.;

Update:2022-07-24 23:26 IST

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,033 இடங்களில் நடைபெற்றது. இப்பணியில் பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்கள், தன்னார்வலர் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்