கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. தஞ்சை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் கும்பகோணம், சுவாமிமலை, கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், நாச்சியார்கோவில் உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சராசரியாக 540 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், செம்பனார்கோவில் பகுதிகளில் இருந்து வந்திருந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10 ஆயிரத்து 409-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 796-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது.