நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம்: மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவமா..?

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக மக்கள் புகார் அளித்தனர்.

Update: 2024-04-25 12:58 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கமம்விடுதி அடுத்த குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இன்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பக்குதி மக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்தபோது நீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பினர். இதைத்தொடர்ந்து தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.

குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கரைத்த மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மனிதக் கழிவை கலந்தவர்கள் யார் என்று தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்