திருப்பூர் மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகள்

முதலைகளை பிடித்துச் செல்ல வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-13 00:56 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, சில முதலைகள் தப்பிச் சென்று ஆற்றுப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. திருப்பூர் கல்லாபுரம், மடத்துக்குளம், கடத்தூர், கண்ணாடிப்புத்தூர் ஆகிய இடங்களில் கரைகள் மற்றும் பாறைகளின் மீது முதலைகளை அடிக்கடி காண முடிகிறது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் குறையாததால், முதலைகளை பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமராவதி ஆற்றுப்பாலத்தின் மீதிருந்து ஆற்றில் உலா வரும் முதலைகளை பார்க்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களிலும் முதலைகள் சுற்றித் திரிவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அச்சமடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் முதலைகளை பிடித்துச் செல்லுமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்