தொடர் மழை காரணமாக வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Update: 2022-11-13 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தொடர் மழை காரணமாக வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வாணியாறு அணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள வாணியாறு அணையின் இடதுபுற கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட பகுதி ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.

வலதுபுற கால்வாய் மூலம் ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10 ஆயிரத்து 517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பழைய ஆயக்கட்டு கால்வாய்

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் தொடர் கனமழை காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் வரை மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்தது. தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது அணைக்கு வினாடிக்கு 115 கனஅடி தண்ணீர் வந்தது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 115 கனஅடி நீரும் பழைய ஆயக்கட்டு கால்வாயில் திறந்து விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்