மினி லாரி மோதி டிரைவர் சாவு

மினி லாரி மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-08-14 17:37 GMT


சிவகங்கையை அடுத்த ராகினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தன் (வயது 37). டிரைவர். சம்பவத்தன்று அவர் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை-மதுரை மெயின் ரோட்டில் சென்றார். முத்துபட்டி அருகே சென்ற போது எதிரே வந்த மினிலாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வசந்தன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்