போலீஸ்காரர் திடீர் சாவு

போலீஸ்காரர் திடீரென இறந்தார்.

Update: 2023-04-27 18:45 GMT

அவனியாபுரம், 

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரில் வசித்து வந்தவர் மணிகண்டன்(வயது 34). இவர் காவல்துறையில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இறந்த மணிகண்டனுக்கு மனைவியும், 4 வயதில் கார்த்திக் என்ற மகனும், 2 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனின் இறுதி சடங்கில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் மற்றும் தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனித் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்