பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

Update:2023-06-21 01:00 IST

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள கிருஷ்ணன்கொட்டாயை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். கடமடை அருகே பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பெரியசாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பெரியசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்