கிணற்றில் கொட்டியமருத்துவ கழிவுகளை அகற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Update:2023-07-17 01:00 IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சவுளூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட குளுக்கோஸ், உதிரி பாகங்கள், சிரஞ்சிகள், ஊசிகள், மாத்திரை, மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டி உள்ளனர். இதனால் கிராமத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் கிணற்றில் கொட்டிய மருத்துவ கழிவுகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என, கிராம மக்கள் தெரிவித்ததனர்.

Tags:    

மேலும் செய்திகள்