விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். அகில பாரத சன்னியாசிகள் நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் ராஜாஜி, திருக்கோவில் திருமடங்கள் அமைப்பாளர் சரவண கார்த்திகேயன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளுக்கு முரணாக நடைசாற்றப்படாமல் உள்ளது.இது குறித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவிலில் இடைநிறுத்த தரிசனம் நடைமுறைப்படுத்தக் கூடாது. புதிய தரிசன கட்டணம் ரூ.300 நடைமுறைப்படுத்தக் கூடாது. உள்ளூர் மக்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோட்ட பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், திருநாவுக்கரசு, மாவட்டத் தலைவர் மணிகண்டன், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.