டெங்கு ஒழிப்பு பணி

சங்கராபுரம் அருகே டெங்கு ஒழிப்பு பணி

Update: 2023-07-04 18:45 GMT

சங்கராபுரம்

டெங்கு ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்(பொறுப்பு) சரவணன், ஆய்வாளர்கள் பாசில், வள்ளி, சந்திரன், அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பொது இடங்களில் கிடந்த டெங்கு கொசுப்புழுக்கள் உருவாவதற்கு காரணமான டயர், உரல், தேவையற்ற பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். குடிநீர் தொட்டிகளில் குளோரினேசன் செய்து, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் சுகாதார பணியாளர்கள், ஊராட்சி செயலாளர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்