வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

நாகை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.

Update: 2022-06-10 14:46 GMT

வெளிப்பாளையம்:

நாகை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள் ஆய்வு

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளையும், மகாலெட்சுமி நகர் பகுதியில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் மண் சாலைகளை பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து நாகை ஆசாத் மார்கெட் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகளையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் விரிவாக்க பணிகளையும், ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் அக்கரைகுளம் செல்லும் வழியில் பாலம் கட்டும் பணியையும், காடம்பாடி, பப்ளிக் ஆபிஸ் ரோடு பகுதிகளில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

ஆய்வு கூட்டம்

பின்னர் கூக்ஸ் ரோடு பகுதியில் குப்பபைகளை கொண்டு இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நுண் உரகுடில், நகராட்சி குப்பை கிடங்கில் பயோ-மின்னிங் முறையில் குப்பைகளை பிரிக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நகரமன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், மண்டல பொறியாளர், நகராட்சி ஆணையர்கள், நகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், மண்டல பொறியாளர் பார்த்திபன், நகராட்சி ஆணையர்கள் ஸ்ரீதேவி, ஹேமலதா நகராட்சி பொறியாளர்கள் ஜெயகிருஷ்ணன், முகமது இப்ராகிம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்