தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவருக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.;
கொடைக்கானல் நகரில் உள்ள புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவடி எடுக்கும் திருவிழா இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து நாயுடுபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலை அடைந்தனர். அங்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவடி விழா கமிட்டி கவுரவ தலைவர் கோவிந்தன், தலைவர் தங்கராஜ், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நகர் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.