பொங்கலுக்கு 22,797 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

வரும் 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update:2026-01-06 14:01 IST

சென்னை,

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் ஜன. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தமிழக போக்குவரத்துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டும் பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 22,797 சிறப்பு பேருந்துகளை இயக்க அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்