பழங்கால சாமி சிலைகள் கண்டுபிடிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே பழங்கால சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Update: 2023-04-02 18:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தின் அருகில் இருந்த முட்செடிகளை வெட்டி அகற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு மண்ணுக்குள் புதைந்த நிலையில் சாமி சிலை ஒன்று தெரிந்தது. இதையடுத்து திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சிவபக்தர்கள் மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்தார். அப்போது அங்கு கல் தூண்கள் மற்றும் கல்லால் ஆன சண்டிகேஸ்வரர், தவ்வை சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் பழங்காலத்தில் இங்கு சிவன் கோவில் இருந்து இருக்கலாம் என சிவபக்தர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து சாமி சிலைகளை அங்கேயே வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்