தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி
விஜயாபதியில் தி.மு.க. சார்பில் சோலார் மின்விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது.;
இட்டமொழி:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி நிர்வாகி விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் ராதாபுரம் ஒன்றியம் விஜயாபதி ஊராட்சி குறிஞ்சிகுளம், காமநேரி ஆகிய ஊர்களில் தனது சொந்த செலவில் 6 சூரியகலன் (சோலார்) தெருவிளக்குகள் மின்கம்பம் அமைத்து பொருத்தி தொடங்கி வைத்தார்.
மேலும் விஜயாபதி ஊராட்சி ஆவுடையாள்புரம், காடுதலா கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்தார். கூடங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று வளாகத்தில் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.