செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம்

காலை 9 மணிக்கு பிறகே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Update: 2023-06-14 00:30 GMT

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செந்தில் பாலாஜியின் ஈசிஜி இயல்பாக இல்லை. காலை 9 மணிக்கு பிறகே உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்