அரசு டாக்டருக்கு வரதட்சணை கொடுமை

தேனி அருகே அரசு டாக்டரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-20 19:15 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் குலாம். இவர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் ஷகிலா பாத்திமா. அரசு டாக்டர். இவருக்கும் கூடலூர் பழனிவேல் பிள்ளை தெருவை சேர்ந்த டாக்டர் அப்பாஸ் மகன் தவுபீக் அகமது என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தவுபீக் அகமதுவின் தந்தை அப்பாஸ் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். அதில் தவுபீக் அகமதுவும் டாக்டராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது ஷகிலா பாத்திமாவின் பெற்றோர் நகைகள், பணம் கொடுத்தனர். இந்நிலையில் கர்ப்பிணியான ஷகிலா பாத்திமாவிடம் அவருடைய கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரசவத்துக்காக தனது தந்தை வீட்டுக்கு வந்த ஷகிலா பாத்திமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கணவர் குழந்தையை பார்க்க வராமல் ஏற்கனவே சொன்னபடி பணம், நகைகள் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷகீலா பாத்திமா புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் தவுபீக் அகமது, மாமனார் அப்பாஸ், மாமியார் ரெஜினா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்