புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-08-12 00:45 IST

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் வரவேற்று பேசினார்.

தேவகோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கி போதைப்பொருள் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏறபடுத்தினார். இப்பள்ளி உதவி தலைமையாசிரியை விமலா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி முதல்-அமைச்சர் பேசிய வீடியோ காண்பிக்கப்பட்டது. முடிவில் மாணவ, மாணவிகள் அனைவரும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். இதில் போலீஸ் செந்தில், மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்