காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-10-09 11:48 GMT

சென்னை,

காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றத்திற்கான, 'சென்னை ஓட்டம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியுடன் சேர்ந்து சிறிது தூரம் மாரத்தான் ஓடினார்.

விழிப்புணர்வு நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, நடிகர் சித்தார்த், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

தமிழக அரசு காலநிலை மாற்றங்கள் சம்பந்தமான பிரச்சனையை உடனடியாக கையிலெடுக்க வேண்டும். உடனடியாக காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும். ஏனென்றால் சென்னையில் மட்டுமில்லை, உலக அளவில் இயற்கை சீற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெப்பநிலை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

100 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டு என்று ஆண்டுதோறும் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ஒரு பகுதியில் வெள்ளம் இருக்கிறது. ஒருபகுதியில் வறட்சி இருக்கிறது. ஐ.நா சபை இன்னும் 8 ஆண்டுகளுக்குள் நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்