தர்மபுரி அருகே கோவில் தேர் பள்ளத்தில் சரிந்ததால் பரபரப்பு

Update:2023-06-05 00:15 IST

தர்மபுரி அருகே பழைய தர்மபுரியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு சிறப்பு பூஜைகள் தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். அப்போது இரவு 7 மணி அளவில் தேரின் முன்புற இடது சக்கரம் சாக்கடை கால்வாய் பள்ளத்தில் சரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிரேன் மூலம் தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் மீண்டும் தேரை பக்தர்கள் இழுத்து சென்று நிலை சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்