தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-01-02 00:10 IST

கீரனூர் அருகே வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 41). விவசாயி. இவர், ஒருவரிடம் மாடு விற்றதில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினையில் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், முருகேசன் நேற்று முன்தினம் இரவு அந்த நபரின் வீட்டு மாட்டு கொட்டகை முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக முருகேசன் உறவினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்