கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதரக்குடி விவசாயிகள் இணைந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பாதரக்குடி கிராமத்தில் போடப்படும் தேசிய நெடுஞ்சாலைத்துறை எண் 393-க்காக விவசாயிகளிடம் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மிக குறைவான இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அனைவருக்கும் பாரபட்சமின்றி இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.
அழகப்பன், ராஜேந்திரன், ராமநாதன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டரிடம் மனு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் பெருமாள், மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் வேணுகோபால், ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்திவேல், மாதவன், தமிழரசன், அழகப்பன், லெட்சுமணன் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போராட்ட முடிவில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.