பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் வாயிலாக ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

Update: 2023-09-02 03:23 GMT

பழவேற்காடு,

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும் பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி., -சி57 ராக்கெட் வாயிலாக ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அதையொட்டி, மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல, மாவட்ட மீன்வளத்துறை தடை விதித்து உள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொன்னேரி மீன்வளத்துறை சார்பில், மீனவ கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்