பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் ஊராட்சி மங்களமேடு கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பெரிய ஏரியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏரியில் மீன் பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, கெண்டை, விரால், கெளித்தி உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கின.