பிறந்தநாள் வாழ்த்து - நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆடியோ...!

செல்போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.;

Update:2023-03-03 21:38 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ம் தேதி, தமது 70 வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, வாழ்த்து கூற திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் செல்போன் எண்ணும், மெய்நிகர் செல்பி எடுக்க இணையதள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் தொலைபேசி எண்ணுக்கு 21 லட்சத்து 67 ஆயிரத்து 411 பேர் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 16 லட்சத்து 75 ஆயிரத்து 484 பேர் மெய்நிகர் செல்பி எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோ பதிவில், அனைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்