50 மாணவிகளுக்கு இலவச தையல் எந்திரம் -அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வழங்கினார்

50 மாணவிகளுக்கு இலவச தையல் எந்திரத்தை அமைச்சர் வழங்கினார்.

Update: 2023-01-25 18:45 GMT

திருப்பத்தூர்,

நகர்ப்புற வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நேஷனல் அகாதமி சமுதாயக் கல்லூரியில் தையல் பயிற்சி பயின்ற50 மாணவிகளுக்கு இலவச தையல் எந்திரம்வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார்.

தொழிலதிபர் துவார் சந்திரசேகர், மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், கல்லூரி தாளாளர் காசிநாதன், ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். தையல் எந்திரம் மற்றும் பயிற்சி சான்றிதழ் வழங்கி பேசிய அமைச்சர், தமிழக முதல்வரின் கனவுத்திட்டமான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த கலைஞர் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள் தொழில் வளர்ச்சியடைந்து தங்கள் வாழ்க்கையின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டு தனியார் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலாராணி, பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் பொசலான், மாவட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர் கே.எஸ்.நாராயணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழர் திருநாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட கோலப்போட்டி நடைபெற்று அதற்கான பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.முன்னதாக அனைவரையும் மதுமோனிஷா வரவேற்றார். விழா முடிவில் கல்லூரி முதல்வர் சுரேஷ்பிரபாகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்