நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காந்தி ஜெயந்தி விழா

நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.;

Update:2022-10-03 00:06 IST

மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜரின் 47-வது நினைவுதினம் நிகழ்ச்சி அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மகாத்மா காந்தி மற்றும் காமராஜரின் உருவ படத்திற்கு நகர மன்ற தலைவர் லட்சுமிபாரி, துணை தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரக்கோணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்