லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

Update: 2023-05-01 18:45 GMT

ரெட்டிச்சாவடி

கடலூரை அடுத்த சிங்கிரிகுடியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருள வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக காலையில் லட்சுமி நரசிம்மர் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜை நடைபெறுகிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு தீர்த்தவாரி அவரோகணமும், 5-ந் தேதி தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதி உலா, 6-ந் தேதி புஷ்ப யாகம், 7-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்