4½ பவுன் சங்கிலி பறிப்பு

நாச்சியார்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-03-08 01:46 IST

திருவிடைமருதூர்,


நாச்சியார்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சங்கிலி பறிப்பு

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி செல்வி. இவர் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் நாச்சியார்கோவிலில் இருந்து ஏனாநல்லூருக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 போ் செல்வியை மறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல்வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். உடனே அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி வி்ட்டார்.

வழக்குப்பதிவு

சிக்கிய நபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாச்சியார்ோயில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெங்களூரு சிவாஜி நகரை சேர்ந்த கலீம் மகன் முகமதுசமீர்(வயது36) என்றும்அவருடன் வந்தவர் சவுபிக் என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த முகமதுசபீர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்