அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு

அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு;

Update:2022-05-27 03:42 IST

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கோட்டாத்தூரில் இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி(வயது 54). அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மண்ணச்சநல்லூர் சென்றார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கம்மல், சங்கிலி உள்பட 4¼ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்