லாரி மீது அரசு பஸ் மோதல்; 10 பேர் படுகாயம்

லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2022-10-22 00:15 IST

நெகமம், 

நெகமம் அருகே செஞ்சேரிமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது நெகமம் சின்னேரிபாளையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தவர். உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் டிரைவருக்கு இடதுபுறத்தில் குறைவான பயணிகள் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்