மண்டவாடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் மண்டவாடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

Update: 2023-05-02 19:00 GMT

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மண்டவாடி ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தார். இதில் உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 12,525 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. அதன்படி மண்டவாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 200 வீடுகளும், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு 150 வீடுகளும் என மொத்தம் 350 வீடுகள் கேட்டு பொதுமக்கள் மனுக்கள் கொடுத்துள்ளனர். அதேபோல் பழுதடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த ஊராட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைகுமரன், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், மண்டவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி குப்புசாமி, ஊராட்சி செயலர் தங்கவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்