6,992 நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஆய்வகம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

அரசு பள்ளிகள் ‘வறுமையின் அடையாளமாக இல்லாமல், பெருமையின் அடையாளமாக இருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Update: 2024-01-11 00:23 GMT

சென்னை,

அரசு பள்ளிகள் 'வறுமையின் அடையாளமாக இல்லாமல், பெருமையின் அடையாளமாக இருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு நிகரானவை என்பதை நிரூபிக்கும் விதமாகவும் சில திட்டங்கள், வசதிகள் செய்யப்படுகின்றன.

அந்த வரிசையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் "ஸ்மார்ட் போர்டு'' வசதி செய்து தரப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 ஆயிரத்து 418 பள்ளிகளில் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது.

அதேபோல், 6 ஆயிரத்து 992 நடுநிலைப்பள்ளிகளுக்கு "ஹைடெக் லேப்'' என்கிற ஹைடெக் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

'ஹைடெக் லேப்' வசதிக்கான அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. மேலும் இந்த 'ஹைடெக் லேப்', கணினி குறித்து தகவல் தெரிந்த ஒரு பணியாளரையும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய இருக்கின்றனர்.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டன. இதன் மூலம் 6 ஆயிரத்து 992 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு பணியாளர் வீதம் 6 ஆயிரத்து 992 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்