சுதந்திர தின விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது.;

Update:2022-08-17 00:25 IST

குத்தாலம்: 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றியக்குழு துணை தலைவர் முருகப்பா தலைமை தாங்கினார்.ஒன்றிய ஆணையர் சுமதி முன்னிலை வகித்தார். இதில் குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் ராமலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் நன்றி கூறினார். குத்தாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ராமலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.

தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கோமதி, பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சங்கீதா மாரியப்பன், குத்தாலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, குத்தாலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் விஜயேந்திரன், தீயணைப்பு நிலையத்தில் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர். குத்தாலம் வட்டத்தில் உள்ள 51 ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்