நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு

நெல்லையில் நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update:2023-03-03 02:03 IST

நெல்லை அருகே உள்ள மேட்டுபிராஞ்சேரி சேர்ந்தவர் எட்டப்பன் (வயது 50). இவருக்கு நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவரால், 6 மாதத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பு கடந்த 26-ந் தேதி அன்று அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் எட்டப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நன்னடத்தை பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதற்காக கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி, நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் மாணிக்கவாசகம், முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய அவர் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக எட்டப்பனை 5 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்